கடன் தொல்லையால் நடந்த விபரீதம்..காருக்குள் தீ வைத்து எரிந்த கொடுமை..!

கடன் தொல்லையால் நடந்த விபரீதம்..காருக்குள் தீ வைத்து எரிந்த கொடுமை..!



The tragedy that happened due to debt problems.. The car was set on fire.

58 வயது வயதுடைய ஒருவர் காருக்குள் வைத்து மனைவி, மகனுக்கு தீ வைத்து தானும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்துகொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் ஜெய்தாலா பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜ் கோபால்கிருஷ்ண பட் (58). இவரது மனைவி சங்கீதா பட் (55). இவர்களுக்கு நந்தன் (30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அவருக்கு கடும் நிதிச்சுமை இருந்தள்ளது. இதனால், ராம்ராஜ் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். 

இந்நிலையில், ஹோட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிடலாம் என கூறி ராம்ராஜ் தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். ஹப்ரி புனர்வசன் என்ற இடத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் காரை நிறுத்திய ராம்ராஜ்  தான் வைத்திருந்த பெட்ரோலை திடீரென தன் மீதும் தனது மனைவி மற்றும் மகன் மீதும் ஊற்றினார். என்ன நடக்கிறது என்பதை இருவரும் உணர்வதற்குள் ராம்ராஜ் தன் மீது தீ வைத்துக்கொண்டு தனது மகன், மனைவி மீதும் தீயை பற்றவைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாயும், மகனும் காரில் இருந்து கிழே இரங்கியுள்ளனர். ஆனாலும், அவர்கள் இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது.

இதற்கிடையில், ராம்ராஜ் காருக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப்படையினர் கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கீதா மற்றும் நந்தன் இரண்டு பேரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், பற்றி எரிந்த காரை தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். காரில் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த ராம்ராஜின் உடலை மீட்டனர் . 

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ராம்ராஜின் வீட்டில் இருந்து தற்கொலை கடித்தத்தை கைப்பற்றினர். அந்த கடித்தத்தில் நிதிச்சுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக ராம்ராஜ் எழுதியிருந்தார். ஆனால், ராம்ராஜ் இவ்வாறு நடந்துகொள்வார் என்பது அவரது மனைவிக்கும், மகனுக்கும் தெரியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.