தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
கருப்பாய் இருந்ததால் கோயிலில் இருந்து பெண்ணின் தலை முடியை இழுத்து வெளியே தள்ளிய சம்பவம்... அறங்காவலரின் கொடூர செயல்..!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள அமிர்தல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்குள் அப்பெண் வழிபாடு செய்து கொண்டிருக்கும்போது அறங்காவலரான முனி கிருஷ்ணப்பா என்பவர் "நீ கருப்பாய் இருக்கிறாய் என்றும், பார்த்தால் குளித்துவிட்டு வந்தது போல் தெரியவில்லை" என்றும் இழிவாக பேசியுள்ளார்.
மேலும் அப்பெண்னை வழிபாடு செய்ய அனுமதிக்காமல் அவரது முடியை பிடித்து இழுத்துச் சென்று கோவிலுக்கு வெளியே தள்ளியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்றி இது பற்றி வெளியில் சொன்னால் அப்பெண்னை கொன்று விடுவதாகவும் முனி கிருஷ்ணப்பா மிரட்டி உள்ளார்.
இந்நிலையில் இந்த காட்சிகள் அனைத்தும் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் முனி கிருஷ்ணப்பாவிடம் விசாரிக்கவே அவர் அப்பெண் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும் இதன் காரணமாகவே அவரை வெளியேற்ற வேண்டியது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.