இந்தியா

ஒரு மின்கம்பத்தை நடுவது இவ்வளவு சிரமமா! ஒப்பந்த ஊழியர்களின் உழைப்பை பாருங்கள்

Summary:

The hard work of EB employees

குளுகுளு ஏசி, வாஷிங்மிசின், பிரிட்ஜ், டிவி என நாம் சொகுசு வாழ்க்கை நடத்த மிக முக்கிய காரணமாக அமைவது மின்சாரம். இப்படி ஒரு கண்டுபிடிப்பு இல்லையேல் நாம் இருண்ட காலத்தில் தான் இருந்திருப்போம். 

இந்த அரியவகை கண்டுபிடிப்பானது பல்வேறு இடங்களில் வனவெவ்வேறு விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அப்படி ஆங்காங்கே தயாரிக்கப்படும் மின்சாரம் ஒரு இடத்தில் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகிக்கப்படுகிறது. 

மாதம் முழுவதும் சொகுசாக இருந்துவிட்டு மின் கட்டணத்தை பார்க்கும் போது மட்டும் நமக்கு தலை சுற்றுவது போல் இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு சிரமத்தை தாண்டி எத்தனை பேரின் உழைப்பை தாண்டி வருகிறது என்பதை பற்றி சிந்திக்க நாம் தவறிவிடுகிறோம். 

குறிப்பாக காடு, மலை என எதுவும் பாராமல் தங்களின் கடின உழைப்பால் மின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மின் கம்பங்களை நட்டு வருகின்றனர். அதிலும் ஏதாவது இயற்கை சீற்றத்தால் மொத்தமும் சாய்ந்தால் இரவு பகல் பாராமல் கடினமாக உழைக்க கூடியவர்கள் அவர்கள். 

அப்படிப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மின் கம்பங்களை எப்படி நடுகிறார்கள் என்பதனை பெரும்பாலானோர் பார்த்திருக்க மாட்டீர்கள். இதோ அவர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை பாருங்கள். இனியாவது மின்சார ஊழியர்களை மதிப்போம். அன்புடன் தமிழ்ஸ்பார்க். 


Advertisement