சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
இறந்ததாக அறிவிக்கப்பட்ட பாஜக முன்னாள் தலைவர் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி... தொடரும் சிகிச்சை.!
உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் உத்திரபிரதேஷ் மாநில முன்னாள் தலைவராக இருந்தவர் மகேஷ் பாகல். இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று திடீரென அவரது உடல் நிலை மோசம் அடைந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கீகரித்து அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். உறவினர்களும் அவரது உடலை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
அவரது உடல் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டதும் அசைந்திருக்கிறது. மேலும் சிறிது நேரத்தில் கண்விழித்து பார்த்திருக்கிறார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.