பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
மீண்டும் வேலையை காட்டும் கொரோனா: ஒருவர் பலி..!! 60 பேருக்கு தொற்று உறுதி..!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்தது. பின்னர் இதற்கான தடூப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தபட்டது.
இந்த நிலையில், நமது நாட்டை பொறுத்தவரை தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 73 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனாதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 1,503 பேர் ஆகும். கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது.