ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்.! ஒட்டுமொத்த மாநிலமும் பிரார்த்தனை.!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்.! ஒட்டுமொத்த மாநிலமும் பிரார்த்தனை.!



The boy who fell into the deep well

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் சம்மா மாவட்டத்தில், மூடப்படாமல் கைவிடப்பட்ட, 80 அடி ஆழ்துளை கிணறு ஒன்றில், ராகுல் என்ற 10 வயது சிறுவன் தவறி விழுந்தான். அந்த சிறுவனுக்கு காது கேட்காது, பேசவும் முடியாது என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிறுவனை மீட்கும் பணியில், மாநில பேரிடர் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டு, மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது. ராகுலின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, மீட்பு பணிகளை பார்வையிட்ட கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

இதனிடையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உள்ளே இருந்து 80 மணி நேரத்திற்கும் மேலாக ஆழ்துளை கிணற்றில் தவிக்கும் நிலையிலும் சிறுவன் மன தைரியத்துடன் மீட்புக்குழுவுக்கு நல்ல ஒத்துழைப்பை வழக்கும் சிறுவன் தண்ணீர் குடிப்பது மீட்புக்குழுவினர் தந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது என செய்து வருகிறார். இதுதொடர்பாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஒட்டுமொத்த மாநிலமும் சிறுவன் ராகுலுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.