தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி... ஏன், என்ன ஆச்சு... அதிர்ச்சியில் தொண்டர்கள்!!Telungana old CM Chandra sekar admitted in hospital

தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சந்திரசேகர் ராவ் எர்ரவெல்லி உள்ள தனது பண்ணை வீட்டில் இருக்கும் போது திடீரென வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனே சந்திரசேகர் ராவை ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என கூறியுள்ளனர்.

இது குறித்து தன்னுடைய டிவிட்டர் தளத்தில் கே.சி.ஆர் மகள் கவிதா கூறியதாவது, தந்தை லேசான காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் உங்கள் அன்பு மூலம் அவர் விரைவில் குணமடைவார் என தெரிவித்துள்ளார்.