இந்தியா

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொடூரமாக வெட்டிய மர்மநபர்... 5 தனிப்படை அமைத்து போலீசார் வலைவீச்சு..!

Summary:

சாலையில் நடந்து சென்ற பெண்ணை கொடூரமாக வெட்டிய மர்மநபர்... 5 தனிப்படை அமைத்து போலீசார் வலைவீச்சு..!

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, கத்தியால் வெட்டிக்கொலை செய்ய முயன்றவரை 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹபீஸ் நகரில் சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த நீண்ட கத்தியால் சரமாரியாக பெண்ணை தாக்கியுள்ளார்.

இதனைக்கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் மர்ம நபரை பிடிக்க முயன்றபோது, அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்த கொலைமுயற்சி சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர், அவருக்கு பல நாட்களாக தொந்தரவு அளித்தது தெரியவந்தது. 

இதுகுறித்து பெண் புகார் அளித்ததால், போலீசார் அவரை சிறையில் அடைத்த நிலையில், சிறையில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்து மீண்டும் பெண்ணிடம் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்து தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரரை தேடி வருகின்றனர்.


Advertisement