மாணவியுடன் நெருக்கமாக இருந்த ஆசிரியர்! இடையில் வந்த ரவிக்குமார்... பழிவாங்கும் நோக்கில் நடந்த சதி! பேராசிரியரின் பெரிய நாடகம்... தெலங்கானாவில் பரபரப்பு..!!!



telangana-student-death-lecturer-arrest

தெலங்கானா நஸ்பூரில் பாலிடெக்னிக் மாணவி விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியை கடத்திச் சென்ற முன்னாள் பேராசிரியர், அவரது காதலரை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் நவீன் குமார் மற்றும் ரவிகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியுடன் நெருக்கமாக இருந்த பேராசிரியர்

நஸ்பூர் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் நவீன் குமார். அதே கல்லூரியில் படித்த தந்திரா (20) என்ற மாணவியுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படிப்பை முடித்த தந்திரா, மேற்படிப்புக்காக ஐதராபாத் சென்றபோது ரவிகுமார் என்பவருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால் நவீன் குமாருடனான தொடர்பை அவர் குறைத்துக் கொண்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்து காவலர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி... நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!!

இதையறிந்த நவீன் குமார் ஆத்திரமடைந்துள்ளார். ரவிகுமாரை பழிவாங்குவதற்காக தந்திராவை பயன்படுத்தி அவரை ஒரு வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரில் கடத்தி விஷம் கொடுத்ததாக புகார்

வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தந்திராவை நவீன் குமார் காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ரவிகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்ததாக தந்திராவை மிரட்டி கடிதம் எழுத வைத்துள்ளார். அதன்பின் அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்திய நவீன் குமார், தந்திராவின் செல்போனை பயன்படுத்தி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தந்திரா தற்கொலைக்கு முயன்றதாக நம்ப வைக்கும் வகையில் அவர் நாடகமாடியதாக விசாரணையில் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா, போன் பதிவுகள் மூலம் சிக்கியவர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நவீன் குமார் மற்றும் ரவிகுமார் கைது செய்யப்பட்டனர். தீவிர விசாரணையில், ரவிகுமாரை பழிவாங்கி போலி வழக்கில் சிக்க வைப்பதற்காக நவீன் குமாரே திட்டமிட்டு தந்திராவை கடத்தி விஷம் கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெலங்கானா மாணவி கொலை வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: அம்மா.. பயமா இருக்கு! அப்பா குழி தோண்டிட்டு இருக்காரு... மாயமான மகள் தாயிடம் பேசிய கடைசி வார்த்தை! வெளிவந்த திடுக்கிடும் பின்னணி... கொடூர சம்பவம்...!!!