கர்ப்பிணி மனைவி, 2 மகள்களை நீச்சல் குளத்தில் அமுக்கி கொன்ற கொடூர கணவன்! பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மை!!!



telangana-man-drowns-pregnant-wife-children-shocking-case

தெலுங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பிஞ்சு மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமகொண்டா மாவட்டம் பொன்னேலு கிராமத்தில் நடந்த இந்த கொடூரம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விபத்து போல தோன்றிய இந்த மரணம், பின்னர் கொலை என மாறியது போலீஸ் விசாரணையில் உறுதியானது.

சந்தேகத்திலிருந்து தொடங்கிய விசாரணை

சொந்தமாக நீச்சல் குளம் நடத்தி வந்த அசாருதீன் என்பவரின் மனைவி பர்ஹத் மற்றும் இரண்டு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. நீச்சல் தெரிந்தவர்களே இவ்வாறு இறந்தது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.

கருக்கலைப்பு விவகாரம்… தகராறு பின்னணி

விசாரணையில், குடும்பத்திற்குள் நீண்டநாளாக இருந்த மனஉளைச்சல் வெளிச்சத்துக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது கர்ப்பமும் பெண் குழந்தையாக இருக்குமோ என்ற எண்ணத்தில், அசாருதீன் தனது மனைவியை கருக்கலைப்புக்கு வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பும் இதேபோல் இரண்டு முறை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை பர்ஹத் மறுத்ததால், கடந்த ஒரு மாதமாக தம்பதியிடையே வாக்குவாதம் நீடித்தது.

இதையும் படிங்க: நிர்வாணமாக கிடந்த இளம்பெண்ணின் சடலம்! சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை.... திருநங்கையின் தலைக்கேறிய காம வெறியால் நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்….!!!

திட்டமிட்டு நடந்த கொலை

இதையடுத்து, கடந்த புதன்கிழமை மனைவி மற்றும் குழந்தைகளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்ற அசாருதீன், முதலில் தனது மனைவியை தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். பின்னர், தாய் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற காரணம் கூறி, இரு மகள்களையும் கொடூரமாக மூழ்கடித்து கொன்றுள்ளார். இது கொலை என்பதை மறைக்க, சம்பவத்தை விபத்து போல காட்ட முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அசாருதீன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். “மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்துவிடுமோ என்ற பயமே காரணம்” என்ற அவரது வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெண் குழந்தை குறித்த சமூக மனப்பான்மையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

 

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்ய கணவன் போட்ட பலே திட்டம்! பக்கத்துவீட்டு பெண் தான் வேணும்.... நீ வேணாம்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி! கிடுக்குப்பிடி விசாரணையில் போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!!