பட்டப்பகலில் கத்தி முனையில் நகைக்கடைக்குள் நடந்த கொள்ளை; 150 கிராம் நகைகள் கொள்ளை.!Telangana Malakpet Jewelry Theft 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மலக்பேட்டை, அக்பர் பாக் பகுதியில் கிஷவா நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று கடையில் வேலை செய்யும் நபர் இருந்துள்ளார். 

அச்சமயம் வாடிக்கையாளர் ஒருவர் வந்து நகைகள் குறித்து கேட்டு இருந்தார். அப்போது திடீரென முகமூடி அணிந்துகொண்டு கத்தியுடன் உள்ளே புகுந்த இருவர் கும்பல் கடையின் பணியாளரை தாக்கியது. 

மேலும், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நகைகளை தங்களின் பையில் அள்ளிப்போட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். வாடிக்கையாளர் அவர்களை தடுக்க வழியின்றி திணறிபோயினார். 

இந்த விஷயம் குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கின்றன. இதன்பேரில் காவல் துறையினர் குற்றவாளிகளின் அடையாளத்தை சேகரித்து வருகின்றனர். 

மொத்தமாக 150 கிராம் நகைகள் கொள்ளைபோயுள்ளன. உரிமையாளர் தனது மகனை கடையில் இருக்கவைத்து, உணவு சாப்பிட சென்றபோது சம்பவம் நடந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.