தனியார் நிதி நிறுவன லாக்கர் கொள்ளை.. கையோடு பெயர்த்துச்சென்ற கும்பல்.. 2 பேர் கைது.!

தனியார் நிதி நிறுவன லாக்கர் கொள்ளை.. கையோடு பெயர்த்துச்சென்ற கும்பல்.. 2 பேர் கைது.!


Telangana Karimnagar Finance company Robbery

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினத்தில் காலை 10 மணிக்கு ஊழியர்கள் பணிக்கு வரும் போது, நிறுவனத்தின் ஷட்டர் திறந்து இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் நிறுவனத்திற்குள் சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகை லாக்கர் மாயமாகி இருப்பது உறுதியானது. 

இதனைத்தொடர்ந்து, கரீம் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையை தொடங்கி தடயங்களை சேகரித்தனர். மேலும், சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்கையில், மர்ம நபர்கள் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே வந்தது அம்பலம் ஆனது. 

Telangana

மேலும், லாக்கரை உடைக்க எடுத்த முயற்சி தோல்வியை அடைந்ததால், அதனை தூக்கி சென்ற வீடியோவும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மர்ம ஆசாமிகள் உருவத்தை ஒத்தவர்கள் கரீம் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து உறுதியாகியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்த நிலையில், விசாரணையில் கரீம் நகரை சேர்ந்த ஷேக் சாதிக் (வயது 24), முகராம்பூர் பகுதியை சேர்ந்த முகமது ஷாபாத் (வயது 22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பழைய குற்றவாளிகள் ஆவார்கள். 

இவர்களிடம் இருந்து லாக்கர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதை நிறுத்தி நிறுவன ஊழியர்கள் முன்னிலையில் திறந்தபோது ரூ.14 இலட்சத்து 3 ஆயிரத்து 960 பணம் மற்றும் 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டு நிதி நிறுவனத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. புகார் வழங்கிய 3 மணிநேரத்தில் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.