ஆசையாக சாப்பிட்ட மட்டன் எலும்பு தொண்டையிலேயே சிக்கியதால் சோகம்; அவதிப்பட்ட 66 வயது முதியவர்.!telangana-hyderabad-66-aged-man-stuck-with-mutton-piece

 

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், யாதாத்ரி பகுதியை சேர்ந்த 66 வயது முதியவர், கடந்த மாதம் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டு இருக்கிறார். இதன்பின் அவருக்கு வயிற்று உபாதை மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டுள்ளது. 

அல்சர் என தவறாக நினைப்பு

ஆட்டு இறைச்சி உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும் என எண்ணியிருந்த நிலையில், உடல்நல பிரச்சனை சரி ஆகாத காரணத்தால் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதியாகி இருக்கிறார். அங்கு அல்சருக்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நலம் தேறவில்லை. 

இதையும் படிங்க: தொட்டிலில் உறங்கிய 5 மாத பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற நாய்; திறந்துகிடந்த வீட்டில் புகுந்து வெறிச்செயல்.!

எலும்பை உறுதி செய்த மருத்துவர்கள்

பின் அங்குள்ள பிரதான மருத்துவமனையில் அனுமதியான முதியவருக்கு மேற்கொண்ட சோதனையில், அவரின் உணவு குழாயில் எலும்பு துண்டு சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்கள் துரிதமாக எலும்பை வெளியே எடுத்தனர். 

நல்வாய்ப்பாக முதியவரின் உடலநலம் பெரிதளவில் பாதிக்கப்படவில்லை. சிறிது காலத்திற்கு அவரை திரவ வடிவிலான, காரம், புளிப்பு, உப்பு குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை; தந்தை அதிர்ச்சி செயல்.!