புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கொத்தாக தூக்கி இலண்டனுக்கு அனுப்பி வைத்த காவல்துறை..!
ஆடம்பரமான வாழ்க்கையை இலண்டனில் வாழ்ந்து வந்த பெண்மணி, டாக்சி ஓட்டுனருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் வசித்து உள்ள அல்வா பகுதியை சேர்ந்த பெண்மணிக்கு, திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கணவர், குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் வசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கைவிட்டுச் சென்ற கள்ளக்காதலன்.. கண்ணீருடன் தவித்த மனைவியை ஏற்றுக்கொண்ட கணவன்.. இப்படியும் ஒரு பாசம்.!
இந்நிலையில், கடந்த ஆண்டு பெண்ணின் தாய் இயற்கை எய்திவிட்டபோது, பெண் தனது தாயின் இறுதிச்சடங்குக்காக ஹைதராபாத் வந்திருந்தார். அங்கு டாக்சியை புக்கிங் செய்து பயணித்த நிலையில், அதன் வாயிலாக டாக்சி ஓட்டுநர் சிவா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல் வயப்பட்டார்
இருவரும் தங்களின் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்ட நிலையில், மெல்ல பேசத் தொடங்கி, பின்னாளில் இது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இதனிடையே, கடந்த செப். 16 அன்று பெண்ணின் கணவருடைய அம்மா இறந்துள்ளார். இதனால் அனைவரும் இந்தியா வந்துள்ளனர்.
இதனிடையே, தனது கணவரை செப்.30 ம் தேதி தவிக்கவிட்ட பெண்மணி, ரகசியமாக ஹைதராபாத் சென்று சிவாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனது மனைவியை கணவர் தேடியபோது, அவர் ஹைதராபாத் சென்றது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணை
பின் இந்த விஷயம் குறித்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கோவாவில் இருந்த பெண்ணை மீட்டு இலண்டனுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், டாக்சி ஓட்டுநர் சிவா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு கணவனை பலிகொடுத்த மனைவி; உறுதுணையாக மகன்கள்.. 30 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை.!