பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுடன் பாம்பு டான்ஸ் ஆடிய அரசுப்பள்ளி ஆசிரியை! பின் நேர்ந்த விபரீதம்! வைரலாகும் சர்ச்சை வீடியோ!

பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுடன் பாம்பு டான்ஸ் ஆடிய அரசுப்பள்ளி ஆசிரியை! பின் நேர்ந்த விபரீதம்! வைரலாகும் சர்ச்சை வீடியோ!


teacher-nagin-dance-while-training-session

ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில்  பகுதியில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்,  ஆசிரியைகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.இந்நிலையில் பயிற்சி வகுப்பின் இடைவேளையின்போது ஒரு ஆசிரியை மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பாம்பு போல வளைந்து நெளிந்து நடனமாடியுள்ளனர். 

இந்நிலையில் அவர்கள் நடனமாடுவதை அங்கிருந்த எவரோ வீடியோ எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தீயாய் பரவிய நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் பயிற்சி வகுப்பின் போது நடனமாடியது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடனம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது எந்த தவறும் இல்லை.ஆனால் அதற்கென சில நடத்தை வழிமுறைகள் உள்ளன.அதனடிப்படையில் ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இரு ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சிலர்  இடைவேளையின்போது பொழுதை கழிப்பதற்காக ஆசிரியர்கள் நடனமாடியது என்ன தவறு இருக்கிறது எதற்காக அவரை சஸ்பெண்ட் செய்தார்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.