இந்தியா

மஹாராஷ்டிராவில் இருந்து நாமக்கல்லுக்கு நடந்தே வந்த 22 வயது இளைஞர்.! வரும் வழியில்லையே நடந்த சோகம்.!

Summary:

Tamilnadu young man dead while came from maharasthra

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். 22 வயது நிறைந்த இவர் டிப்ளோமா படித்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் அவர் உணவிற்கும், தங்குவதற்கும் பெரும் அவதிபட்டு வந்துள்ளார்.

மேலும் போக்குவரத்தும் ரத்தான நிலையில், லோகேஷ் 30 பேருடன் தமிழகம் நோக்கி நடந்தே வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது சில லாரிகளிலும் ஏறிவந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தெலங்கானாவில் பவுன்பாலிக்கு வந்தபோது அதிகாரிகளால் தடுக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் முகாமில் இருந்த லோகேஷ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்  உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement