சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் ஒற்றை வரி ட்வீட்.! தமிழக அரசியல் பிரபலங்கள் என்ன பதிவிட்டுள்ளனர் பார்த்தீங்களா!!

சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் ஒற்றை வரி ட்வீட்.! தமிழக அரசியல் பிரபலங்கள் என்ன பதிவிட்டுள்ளனர் பார்த்தீங்களா!!


tamilnadu-politician-joins-in-single-word-tweet-trendin

அமெரிக்காவில் அமைந்துள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராக் தனது ட்விட்டர் பக்கத்தில், 'Trains' அதாவது ரயில்கள் என ஒரு வார்த்தையில் டுவிட் செய்துள்ளது. அந்த ட்வீட் பெருமளவில் வைரலான நிலையில்  அதனை தொடர்ந்து ஒற்றை வார்த்தை டுவீட் சர்வதேச அளவில் ட்ரெண்டானது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஐசிசியின் ட்விட்டர் பக்கம் "கிரிக்கெட்" என ட்வீட் செய்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "ஜனநாயகம்" என ட்வீட் செய்தார். அதேபோல் கூகுள் மேப்ஸ், "மேப்ஸ்" எனவும், பிரபல சிஎன்என் செய்தி நிறுவனம் "பிரேக்கிங் நியூஸ்" எனவும், நாசா "யுனிவர்ஸ்" என்றும் ட்வீட் செய்தது.

மேலும் இந்த சர்வதேச ட்ரெண்டிங்கில் தமிழக அரசியல் தலைவர்களும் இணைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் "திராவிடம்" என்றும், சீமான் "தமிழ்த்தேசியம்" என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "தமிழன்" என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் "எடப்பாடியார்" என பதிவிடப்பட்டுள்ளது. அவர் "தமிழ்நாடு" என டுவிட் செய்தார். மேலும் உலக நாயகன் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் "மக்கள்" என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பலரும் ஒற்றைவரி ட்விட் செய்து வருகின்றனர்.