அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
செம குஷியில் ஸ்டாலின்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி குழு! அனல் பறக்கும் அரசியல் களம்....
தமிழக அரசியல் பரப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தங்கள் அடித்தளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக நடக்கின்றன. அரசியல் சூழல் நாட்குநாள் புது திருப்பங்களை சந்தித்து வருகிறது.
திமுக கூட்டணி பலம் – அதிமுக பாஜக எதிரணி ஆயத்தம்
தமது கூட்டணியை வலுவாக வைத்திருக்கும் திமுக, ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நோக்கில் ரணக்கள திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணியும் இபிஎஸ் தலைமையில் ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் பிரச்சாரத் திட்டங்களை வகுக்கிறது.
விஜயின் அரசியல் வருகையால் அதிகரித்த பரபரப்பு
இரண்டு முக்கிய கூட்டணிகளுக்கும் இடையில் நடிகர் விஜயும் அரசியலுக்குள் வந்ததால், 2026 தேர்தல் களம் இன்னும் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. மக்கள் கவனம் அதிகமாக திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... "முதல்வரை தீர்மானிக்கும் விஜய்..." அரசியல் விமர்சகர்கள் பரபரப்பு கனிப்பு.!!
புதிய கட்சி அறிவிக்கும் மல்லை சத்யா
இந்நிலையில் அடுத்த மாதம் 20ஆம் தேதி தனது புதிய கட்சியை அறிவிக்கவுள்ள மல்லை சத்யா, திமுக கூட்டணியில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார். நேற்று திருச்சியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கட்சியின் பெயரை நிர்ணயிக்க புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
2026 தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் இணைவுகள் உருவாகி வரும் இந்த நிலைமைகள் மக்கள் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! கரூர் மக்களை சந்திக்க இடத்தை மாற்றிய விஜய்! இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டால இருக்கு.....