இந்தியா வீடியோ

வாவ் சூப்பர்! பழங்குடியினருடன் அசத்தலாக ஆட்டம் போட்ட தமிழிசை சவுந்தர்ராஜன் - வைரலாகும் வீடியோ.

Summary:

Tamilisai dance

நீண்ட நாட்களாக பாஜக கட்சியில் இருந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இவர் ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தெலுங்கு மொழி பேசியும், பாடல்கள் பாடியும் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. அதில் பழங்குடியின கிராமங்களை நேரில் சென்று சந்திப்பது மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. 

மேலும் தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பழங்குடியினருக்கான பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறினார். மேலும் இவர் இதற்கு முன்பு பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கோயா மற்றும் லம்பாடா பழங்குடியினர் சந்திப்பின் போது அந்த பெண்களுடன் தமிழிசையும் நடனமாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement