நான் மனைவியை பிரிந்து கஷ்டப்படுகிறேன்! இளம்பெண்ணை மயக்கி, வாழ்க்கையை சீரழித்த தமிழ்நடிகர்!tamil-actor-elope-with-young-girl-cheating-his-wife

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சிவா .இவருக்கு திருமணமாகி இருகுழந்தைகள் உள்ளனர். இவர் சென்னை ராமாவரம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தார்.

பின்னர் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த இவர் 'பயபுள்ள' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சிவா பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் தனது மனைவியை பிரிந்து வாழ்வது போன்று நடித்தும், தான் திரைத்துறை பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைபடங்களை காட்டியும்,   அவரை மயக்கியுள்ளார். பின்னர் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். 

    elope

  இந்நிலையில், நடிகர் சிவா அப்பெண்ணுடன் ஊரைவிட்டு ஓடிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.

மேலும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் சிவா, தங்கள் மகளை மயக்கி ஏமாற்றி அவளது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் கண்ணீர்வடித்து தங்கள் மகளை மீட்டுத்தரவேணடும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.