அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
11 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த டியூஷன் டீச்சர்.. விசாரணையில் பகீர்.!!
11 வயது மாணவனுடன் டியூஷன் டீச்சர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவருடன் ஓட்டம்
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் 11 வயது மாணவனுடன் 23 வயது டியூஷன் ஆசிரியை தலைமறைவான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து குஜராத் மாநில காவல்துறையினர் சிறப்பு குழு அமைத்து இருவரையும் தேடி வந்த நிலையில், நான்கு நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் ராய்காட்டில் உள்ள ஓடும் பேருந்தில் ஆசிரியை மற்றும் மாணவரை கண்டுபிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அட பாவமே... "இந்த மழலைய கொல்ல எப்படி மனசு வந்துச்சி..." 3 மாத குழந்தை கொலை.!! தாய் வெறி செயல்.!!
ஒரு வருடமாக நிகழ்ந்த சம்பவம்
ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் தனது 11 வயது மாணவருடன் ஆசிரியை சூரத்தில் இருந்து தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஒரு வருடமாக இந்த ஒரு சிறுவனுக்கு மட்டும் ஆசிரியை பாடம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இருவரும் இணைந்து ஓட்டம்
மேலும் ஆசிரியையின் வீட்டில் திருமணம் செய்துகொள்ள தினமும் வற்புறுத்தி வந்த நிலையில், மாணவரையும் அவரது வீட்டில் படிக்கச்சொல்லி திட்டி வந்ததால் இருவரும் சேர்ந்து ஓட்டம் பிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
பாலியல் உறவு
மாணவருடன் டியூஷன் டீச்சர் பாலியல் ரீதியான உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் மீது கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பளார் விட்ட காவல் அதிகாரி; அதிர்ச்சி வீடியோ.!!