பிரசாதத்தில் விஷமா! மருத்துவமனையில் 40 மாணவர்கள் கவலைக்கிடம்; ஜார்கண்டில் பரபரப்பு

பிரசாதத்தில் விஷமா! மருத்துவமனையில் 40 மாணவர்கள் கவலைக்கிடம்; ஜார்கண்டில் பரபரப்பு



students-admitted-in-hospital-after-eating-prasatham

சில நாட்களுக்கு முன்பு தான் கர்நாடகாவில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

வட இந்தியா முழுவதும், வசந்த பஞ்சமி என்ற சரஸ்வதி பூஜை விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோகர்தாகா என்ற மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றிலும் இந்த விழாவை நேற்று கொண்டாடினர். அப்போது நடைபெற்ற பூஜையின் முடிவில் மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

அப்போது வழங்கப்பட்ட பூந்தியை வாங்கி சாப்பிட்ட சுமார் 40 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அங்குள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

saraswathi poojai

இதுபற்றி அந்த மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ள தகவலில், இதுவரை 40 மாணவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பிரசாதமாகக் கொடுக்கப்பட்ட பூந்தியை தின்றுள்ளனர். அதைச் சாப்பிட்டதுமே வாந்தி எடுத்துள்ளனர். விஷம் கலந்த பூந்தி எனத் தெரிகிறது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, யாருடைய தவறால் இது நடந்தது என்பது கண்டறியப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி ரத்தன் மஹ்வார் தெரிவித்துள்ளார்.