தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மீண்டும் அதிர்ச்சி.! தொடரும் தெருநாய்களின் அட்டூழியம்! துடிதுடிக்க நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்!!
ஐதராபாத்தில் மீண்டும் தெருநாய்கள் தாக்கியதில் 4 வயது சிறுவன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் கொடூரங்களும் அதிகரித்து வருகிறது. அண்மையில் கூட தெருவில் தனியாக நடந்து வந்த நான்கு வயது சிறுவனை தெரு நாய்கள் சூழ்ந்து துரத்தி கடித்து குதறியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சோகம் மறைவதற்கு முன்பே தற்போது மீண்டும் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஐதராபாத்தில் சைதன்யபுரி, மாருதி நகரில் ரிஷி என்ற 4 வயது சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அப்பொழுது அங்கு வந்த தெருநாய்கள் அவனை சூழ்ந்து திடீரென தாக்க துவங்கியுள்ளது.
இந்த நிலையில் பயந்து போன குழந்தை அலறி துடித்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறிப் போய் ஓடி வந்த சிறுவனின் குடும்பத்தினர்கள் தெருநாய்களை அங்கிருந்து விரட்டி, சிறுவனை மீட்டுள்ளனர். மேலும் பலத்த காயமடைந்து துடிதுடித்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.