இந்தியா Covid-19

குடும்பங்களை பிரிந்து தவிப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! சிறப்பு ரயில்களை இயக்க உள்துறை அமைச்சகம் அனுமதி!

Summary:

special rails are allowed by home ministry

ஊரடங்கினால் குடும்பத்தை பிரிந்து வேறு மாநிலங்களில் தவிப்பவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்களை இயக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் ரயில்வே துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் வீட்டைவிட்டு வெளி ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

Indian Railways services suspended | India in Lockdown-2: Railways ...

ஒரு பக்கம் இது வேதனை அளிப்பதாக இருந்தாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு சிறந்த வழி இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே அரசின் உத்தரவை ஏற்று பலரும் வீட்டை விட்டு வெளியில் தங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் இடம் பெயர்ந்த பணியாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் போன்றோர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்கலாம் என உள்துறை அமைச்சகம் ரயில்வே துறைக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. இது முழுக்க கட்டண சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷ்ராமிக் சிறப்பு ரயில் என அழைக்கப்படும் இந்த ரயில் வழக்கம் போல அல்லாமல்  Point to Point ரயில்களாக இயக்கப்படும். இதில் செல்லக்கூடிய பயணிகள் உரிய மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் ஆகியவை புறப்படும் இடத்திற்கான மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் தங்கள் இடத்திற்கு சென்ற உடன் பயணிகளுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே வீடுகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும்.
 


Advertisement