தூங்கி கொண்டிருந்த தாயின் மார்பில் 12 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த மகன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
தூங்கி கொண்டிருந்த தாயின் மார்பில் 12 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த மகன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

குஜராத்தைச் சேர்ந்த மகேஷ் பாஞ்ச்சல் - சாயா பாஞ்ச்சல். இவர்களுக்கு ஜெயேஸ் பாஞ்ச்சல் (22) என்ற மகன் உள்ளார். மகேஷ் பாஞ்ச்சல் தொழில் காரணமாக மும்பையில் உள்ள முலுண்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகேஷ் தொழில் காரணமாக வெளியே சென்றதை அடுத்து தனது தாயுடன் ஜெயேஸ் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயேஸ் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய மன அழுத்தம் குறித்து நண்பர்கள்,பெற்றோர் என யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளான்.
அதன் வெளிப்பாடாக ஜெயேஸ் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளனர். மேலும் தாயிடம் பணம் மற்றும் சொத்தில் தனக்கு பங்கு தர வேண்டும் என கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சாயா மகனை கண்டித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜெயேஸ் சாயா தூங்கி கொண்டிருந்த நேரத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.
தனது தாயின் மார்பில் 12 முறை கத்தியால் அவர் குத்தியதாக தெரிகிறது. கொலை நடந்த சிறிது நேரத்தில் தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த மகன் ஜெயேஸ் தனது தந்தைக்கு உருக்கமாக கடிதம் எழுதினார், ஐ லவ் யூ டாடி அம்மாவின் சாவுக்கு நான் தான் காரணம், நான்தான் என் அம்மாவை கொன்று விட்டேன், என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என எழுதி வைத்துவிட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
ஆனால் அதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.