
somone raped cow
ஆந்திரா மாநிலத்தில் 3 மாத சினையாக (கர்ப்பிணியாக) இருந்த மாடு, திடீரென காணாமல் போயுள்ளது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மற்றும் பால் வியாபாரி நமா புசிசாராஜூ என்பவர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து அந்தப் பசுமாடு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாடு ஒரு மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தது.
அப்போது மாட்டின் பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர், பசுமாட்டை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர், மாடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி படுத்தினார்.
இந்த சம்பவம் அறிந்ததும், கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர், குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.
Advertisement
Advertisement