சமயலைறைக்குள் சென்ற பெண்ணுக்கு கேட்ட வினோத சத்தம்! உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

சமயலைறைக்குள் சென்ற பெண்ணுக்கு கேட்ட வினோத சத்தம்! உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.


Snake at kitchen in odisha

பொதுவாக மழை நேரங்களில் காட்டுக்குள் இருக்கும் சிறு சிறு பூச்சிகள், பாம்புகள் போன்றவை மக்கள் வசிக்கும் இடத்திற்கு வருவது வழக்கமான ஓன்று. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் மாயூர்ப் மாவட்டத்தில் உள்ள பாரிபாடா என்ற ஊரில், பெண்ணொருவரின் வீட்டிற்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. 

குறிப்பிட்ட அந்த பெண் சமைப்பதற்காக வீட்டின் சமையல் அறைக்குள் சென்றபோது அங்கு வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். என்ன சத்தம் என்று தேடி பார்த்த அவருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை.

snake

உடனே இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு அவர் தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்த பாத்திரங்களை அகற்றி பார்த்ததில் கொடூர விஷம் கொண்ட நாக பாம்பு ஓன்று படம் எடுத்தபடி சீறியுள்ளது. இதனால் பயந்துபோன குடும்பத்தினர் இதுகுறித்து வனதுறைக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த அதிகாரிகள் பாம்பை பிடித்து காட்டிற்குள் விட்டனர்.