இந்தியா

ஹோட்டலுக்குள் சிங்கிளாக சீறி பாய்ந்த சிங்கம்.. வைரலாகும் வீடியோ.!

Summary:

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்றில் சிங்கம் ஒன்று

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்றில் சிங்கம் ஒன்று சிங்கிளாக கதவு ஏறி குதித்து விட்டு சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹோட்டல் நுழைவு வாயின் வழியாக நுழைந்த சிங்கத்தை பார்த்து அங்கிருந்த காவலாளி தன்னுடைய கண்ணாடி அறைக்குள் பதுங்கியுள்ளார். பின் அங்கிருந்து ஹோட்டலின் உள்ளே இருந்தவர்களுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

சிங்கிளாக உள்ளே நுழைந்த சிங்கம் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றித்திரிந்த பின் மீண்டும் கதவு ஏறி குதித்து வெளியே சென்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement