பஞ்சாப் ரயில் விபத்தில் பலியான குடும்பங்களை தத்தெடுப்பதாக அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து வாக்குறுதி

பஞ்சாப் ரயில் விபத்தில் பலியான குடும்பங்களை தத்தெடுப்பதாக அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து வாக்குறுதி



sidhu taking care of families died in train accident

தசரா விழாவின்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜோதா பதாக் என்ற பகுதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த விழாவில் அமிர்தசரஸ் எம்.எல்.ஏ சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

இந்த விழாவில் ராவணனின் உருவபொம்மையை எரிக்கும் காட்சியை பலர் அருகிலிருந்த ரயில் தண்டவாளத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பலரின் மேல் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 61 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

sidhu taking care of families died in train accide

இந்நிலையில் ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த சித்து, அரசு அறிவித்த உதவித்தொகையை வழங்கினார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தை தான் தத்தெடுத்துக்கொள்வதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். 

மேலும் ரயில் விபத்தில் சிக்கி பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தொிவித்துள்ளாா். மேலும் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான தரத்தில் கல்வி, வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும் கணவா்களை இழந்த பெண்களுக்கு அவா்களுக்கு தேவையான அளவில் நிதியுதவி வழங்கப்படும். இவை அனைத்து எங்கள் சொந்த செலவில் மேற்கொள்ளப்படும் என்று அவா் உறுதி அளித்துள்ளாா்.