10 ரூபாய் பாக்கிக்காக ரோட்டோர கடையில் சண்டை: வாடிக்கையாளர் செய்த காரியத்தால் நிகழ்ந்த சோகம்..!
10 ரூபாய் பழைய பாக்கி வைத்த விவகாரத்தில் கடை உரிமையாளரை வாடிக்கையாளர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டதிலுள்ள டொரியா என்ற ஊரை சேர்ந்தவர் அவினாஷ் குப்தா. இவர் தனது கிராமத்தில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் 10 ரூபாய்க்கு சாட் மசாலாவை கடன் சொல்லி சாப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, சற்று நேரத்தில் மீண்டும் மற்றொரு நண்பருடன் வந்த தினேஷ், தனது நண்பருக்கும் ஒரு 'சாட் மசாலா' கொடுக்குமாறு அவினாஷ் குப்தாவிடம் கூறியுள்ளார். முன்னதாக 10 ரூபாய் பழைய பாக்கி வைத்து இருப்பதால், சாட் மசாலா கொடுக்க மறுத்ததுடன், அந்த பணத்தை தரும்படி தினேஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கோபமடைந்த தினேஷ் அவினாஷ் குப்தாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தலைக்கேறிய தினேஷ் கடை உரிமையாளர் அவினாஷை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இந்த எதிர்பாரத தாக்குதலில் படுகாயமடைந்த அவினாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறயினர் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.