கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. உயருகிறது இ.எம்.ஐ வட்டி.!

நாம் வாங்கும் பொருள்களை மாதத் தவணையில் வாங்கி பின்னர் பணம் செலுத்திக் கொள்ளும் தவணை முறை தற்போது தனியார் வங்கிகள் மூலமாக கையில் எடுக்கப்பட்டு இ.எம்.ஐ என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில் கனரா மற்றும் எஸ்.பி.ஐ வங்கிகளின் இ.எம்.ஐ வட்டி தொகை என்பது அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோடக் மகேந்திரா வங்கி தனது எம்.எல்.சி.ஆர்-ல் 5 புள்ளியை உயர்த்தி உள்ளது.
இந்த விதி மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்ற நிலையில், ஓராண்டு கடனுக்கு 9.5% புள்ளி விகிதமாகவும், இரண்டு ஆண்டு கடனுக்கு 9.10% புள்ளி விகிதமாகவும், 3 ஆண்டு கடனுக்கு 9.25% புள்ளி விகிதமாகவும் இ.எம்.ஐ தொகை விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் மேற்படி கடன் பெற உள்ள வாடிக்கையாளர்களின் இ.எம்.ஐ அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.