சடலங்களால் பரபரப்பு... பாதி எரிந்த நிலையில் மீட்பு... கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை!shock-in-uttar-pradesh-the-half-burnt-body-of-two-woman

உத்திரபிரதேச மாநிலத்தில் பதாவுன் கிராமத்தில் இரண்டு பெண்களின் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றி  குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில்  பதாவுன் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில்  பிளாஸ்டிக் கவரில் சுத்தப்பட்ட நிலையில்  இரண்டு பெண்களின் சடலங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்புகுதிக்கு சென்ற காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

India

அழுகிய நிலையில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்த சடலங்களில் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு இங்கு வந்து வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களது முதல் கட்ட விசாரணையில்  இரண்டு பெண்களுக்கும் 35 வயதிற்குள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

India

இது பற்றி பேசிய காவல்துறை அதிகாரி  அந்தப் பெண்களின் அடையாளங்கள் தெரியக்கூடாது என்பதற்காக அவர்களது முகத்தை எரித்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  பிரேத பரிசோதனை அறிக்கை பின்கே விவரங்கள் தெரியவரும் எனவும் தெரிவித்தார். மேலும் தடயவியல் நிபுணர்களும்  பரிசோதனை செய்து தங்களது அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  கொலையாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.