இந்தியா

கல்லூரி சேர்ந்த முதல் நாளே மாணவிக்கு நிகழ்ந்த சோகம்! வருத்தத்தில் குடும்பத்தினர்.

Summary:

Shalini bangalore

பெங்களூர் பீன்யா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் MBA முதலாமாண்டு சேர்ந்தவர் ஷாலினி. அனைத்து கல்லூரிகளிலும் முதல் நாள் என்றால் கொண்டாடமாக தான் இருக்கும். அன்று விழாக்கள் நடத்தி புதிய மாணவர்களை அந்தந்த கல்லூரியின் முத்த மாணவிகள் வரவேற்பது வழக்கம்.

அதே போல தான் ஷாலினி புதிதாக சேர்ந்த கல்லூரியில் ஃபிரஷர்ஸ் டே என்ற விழாவை நடத்தியுள்ளனர். அதில் ஷாலினியும் தன் தோழிகளுடன் மேடையில் ராம்ப் வாக் நடந்து வந்துள்ளார். அப்போது திடீரென கிழே விழுந்துள்ளார்.

இதனால் பதற்றமான சக மாணவிகளின் உதவியுடன் ஷாலினியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஷாலினியின் பெற்றோர் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். 


Advertisement