இந்தியா

சீமானை பெற்றெடுத்து அனைத்திற்கும் பக்கபலமாக இருந்த அவரது தந்தை காலமானார்.! டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்.!

Summary:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் க

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

திரு.சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் திரு.செந்தமிழன் அவர்களின் மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும்,

குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement