இந்து மாணவிகளை சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியர்.! அதிர்ச்சி காரணம்.!
இந்து மாணவிகளை சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியர்.! அதிர்ச்சி காரணம்.!

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படித்துவரும் இந்து மதத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவிகள் இருவர் வீடுகளில் இந்து மத பண்டிகையான நவராத்திரி கொண்டாடப்பட்டதால் அந்த மாணவிகளின் தங்கள் நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்கு வந்த அந்த இரு மாணவிகளை அந்த பள்ளியில் பணிபுரியும் வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக தாக்கி, கொச்சை சொற்களை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவிகள் தாங்கள் திலகம் அணிந்து சென்றதற்காக எங்களை பள்ளி வகுப்பு ஆசிரியர் நசீர் அகமது தாக்கியதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவிகள் தாக்கப்பட்டது குறித்து பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆசிரியர் நசீர் அகமதுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும், மாணவிகளை தாக்கிய நசீர் அகமது மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.