சுவிங்கம் துப்புகையில் சோகம்..10-ம வகுப்பு மாணவன் கால் இடறி விழுந்து படுகாயம்..!

சுவிங்கம் துப்புகையில் சோகம்..10-ம வகுப்பு மாணவன் கால் இடறி விழுந்து படுகாயம்..!


School Student Slipped from Upper Floor

காரைக்குடியில் லீடர்ஸ் குரூப் ஆஃப் ஸ்கூல் என்ற சிபிஎஸ்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் பபுள்கம்-ஐ துப்ப முயன்ற போது திடீரென 2-வது மாடியிலிருந்து கால்இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதனைகண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, பள்ளி மாணவன் தவறி  விழுந்ததாக கூறப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.