கல்வி கட்டணத்தை செலுத்தாத ஆட்டோ ஓட்டுனரின் மகனுக்கு பள்ளி நிர்வாகம் செய்த கொடூர செயல்!

கல்வி கட்டணத்தை செலுத்தாத ஆட்டோ ஓட்டுனரின் மகனுக்கு பள்ளி நிர்வாகம் செய்த கொடூர செயல்!



school sealed students hand for not paying fees

பஞ்சாபில் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவருக்கு அடிமைகளை நடத்துவது போல் கையில் முத்திரை குத்தி பள்ளி நிர்வாகம் மாணவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.

மே, ஜூன் மாதங்கள் வந்தாலே பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களின் மிகப்பெரிய கவலை பிள்ளைகளின் கல்வி கட்டணம் தான். தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில் சில பெற்றோர் படாதபாடு பட்டு தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகனான ஹர்ஷ்தீப் சிங், அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறாா். ஹா்ஷ்தீப் வருடாந்திர கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் கல்விக் கட்டணம் செலத்த நினைவுப் படுத்து்ம வகையில் மாணவனின் கையில், பள்ளியின் முத்திரையை அச்சிட்டு ஆசிாியா் அனுப்பியுள்ளாா். 

School fees

இதை போன்று முத்திரைகள் அடிமைகளை அடையாளம் காண தான் அந்த காலத்தில் உடம்பில் குத்துவார்கள். இந்நிலையில் மகனின் கையில் பள்ளியின் முத்திரை குத்தப்பட்டிருப்பதை கண்ட மாணவனின் தந்தை மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார்.

இது தொடா்பாக பள்ளி நிா்வாகத்திடம் ஹா்ஷ்தீப் சிங்கின் தந்தை முறையிட்டுள்ளாா். அதற்கு தோ்வு நடைபெற்று வருவதால் மாணவன் நோட்டு, புத்தகம் எதுவும் கொண்டுவதாததால் கையில் முத்திரை பதித்து அனுப்பியதாக பள்ளி நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

மாணவரை அவமதித்த பள்ளி நிா்வாகத்தின் செயல் தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மாவட்ட கல்வி துறைக்கு புகாா் அளித்தாா். இதற்கு விளக்கம் அளிக்கும் அளிக்குமாறு மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.