AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை... " பள்ளி மேலாளர் மீது போக்சோ வழக்கு.!!
உத்திரபிரதேச தியோரியா மாவட்டத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாகவே மாணவியின் நடவடிக்கையில் மாற்றங்களை கண்ட பெற்றோர் காரணம் குறித்து மாணவியிடம் கேட்டுள்ளனர்.அ
ப்போது மாணவி தனக்கு நடந்த அநீதியை பற்றி பெற்றோரிடம் கூறினார். பள்ளியின் மேலாளராக பணி புரியும் தேவேந்திர குஷ்வாஹா அலுவலக ரூமிற்கு அழைத்து கதவை பூட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மாணவியிடம் இங்கு நடந்ததை பற்றி வெளியே கூறினால் உன்னை தேர்வில் தோல்வியுற செய்வேன் உன் குடும்பத்தை அழித்து விடுவேன் என கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்த மாணவி சில நாட்களாகவே அவரிடம் சித்திரவதையை அனுபவித்துள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்தனர். இதற்கடுத்து மேலாளர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் அதிர்ச்சி... 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தற்காப்பு கலை பயிற்சியாளர் கைது.!!
இதையும் படிங்க: +2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர்... போக்சோ சட்டத்தில் சிறையிலடைத்த காவல்துறை.!!