தேர்வு எழுதிய மாணவியிடம் ஆடையை நீக்கி சோதனை செய்த பறக்கும்படை!! மாணவி எடுத்த விபரீத முடிவு!!

சத்திஸ்கர் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது. பள்ளியில் தேர்வு சமயங்களில் தேர்வறைக்குள் பறக்கும்படையினர் வந்து சோதனைக்கு வருவது வழக்கம். இந்தநிலையில், மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் பறக்கும்படையினர் மாணவ மாணவிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம்ஆடையை களைத்து சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் பிட் ஏதும் இல்லாததை அறிந்து மாணவியை தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.
தேர்வு முடிந்ததும் இல்லத்திற்கும் விரைந்த மாணவி விரக்தி அடைந்தது போல் பேசியுள்ளார்.இதனைப்பார்த்த பெற்றோர்கள் தேர்வை சரிவர எழுதாததால் தான் இவ்வாறு இருப்பதாக எண்ணி கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து மறுநாள் காலையில் மாணவி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் மாணவியை தேட ஆரம்பித்தனர். அப்போது அங்கிருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரின் உடலை பார்த்து கதறியழுதனர்.
இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.