கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது.! புதிய விதிமுறைக்கு கிளம்பிய எதிர்ப்பு.! சுற்றறிக்கையை ரத்து செய்த எஸ்பிஐ.!!

கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது.! புதிய விதிமுறைக்கு கிளம்பிய எதிர்ப்பு.! சுற்றறிக்கையை ரத்து செய்த எஸ்பிஐ.!!



sbi-new-amendment-cancelled

3 மாதத்துக்கு மேலான கர்ப்பிணிகள் பணிபுரிவதற்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என எஸ்.பி.ஐ வங்கி புதிய விதிமுறைகள் வெளியிட்டது. இந்த விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, 3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது என வெளியிட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரத்து செய்துள்ளது.

இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளை தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.