செருப்பால் அடித்து நொறுக்கிய கள்ளக்காதலி.. மனமுடைந்த மானஸ் தூக்கிட்டு சாவு.. பாலராஜுக்கு பால் ஊற்றிய கள்ளக்காதலி..!

செருப்பால் அடித்து நொறுக்கிய கள்ளக்காதலி.. மனமுடைந்த மானஸ் தூக்கிட்டு சாவு.. பாலராஜுக்கு பால் ஊற்றிய கள்ளக்காதலி..!


samrajnagar-district-men-conduct-suicide

கள்ளகாதலி செருப்பால் அடித்ததால், மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகா, பி.ஜி.பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் (பால்ராஜ் வயது 50). இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த தெரசா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அத்துடன் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, தெரசா கோபமுற்று தனது செருப்பால் பால்ராஜை அடித்துள்ளார். இதில் பால்ராஜ் அவமானம் ஆகிவிட்டதே என்ற ஒரு மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

மேலும், தெரசா அவரது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது, மனமுடைந்து கள்ளக்காதலின் வீட்டிற்கு சென்ற பால்ராஜ், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

karnataka

இது குறித்து அறியாத தெரசா திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த போது, பால்ராஜ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பால்ராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், நான் செருப்பால் அடித்ததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளதாக தெரசா கூறியுள்ளார். இருப்பினும் காவல் துறையினருக்கு அவர் மீது சந்தேகம் எழ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.