ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சபரிமலை சென்றிருந்த 2 தமிழக ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் மரணம்.!
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் திறக்கப்பட்டது. அன்றைய நாள் முதலாகவே ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஸ்ரீ ஐயனை கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நீலிமலை, அப்பச்சி மேடு மலைப்பாதையானது நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அவ்வழியாக பக்தர்கள் சென்று வர தொடங்கியுள்ள நிலையில், நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சார்ந்த இளங்கோவன் (வயது 48) மற்றும் நாமக்கல்லை சார்ந்த மாதேஸ்வரன் பம்பையில் இருந்து மலையேறியுள்ளனர்.
இவர்கள் இருவரும் மலையேற்றத்தின் போதே திடீர் உடல்நலக்குறைவை சந்திக்கவே, உடனடியாக மீட்கப்பட்டு பம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.