கொரோனாவால் இந்தியர்களுக்கு பறிபோன ஆண்மை.. தம்பதிகளையே உறவுச்சண்டை.. ஆய்வில் பகீர்..!

கொரோனாவால் இந்தியர்களுக்கு பறிபோன ஆண்மை.. தம்பதிகளையே உறவுச்சண்டை.. ஆய்வில் பகீர்..!



Research Says due to Corona Masculinity is Reduced Indians

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆண்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் பகீர் தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகநாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் மனிதர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் தொடர்பாக உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதனைப்போல, தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பாகவும் ஆய்வுகள் நடக்கின்றன. 

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பெரும்பாலானோருக்கு ஆண்மை குறைந்துள்ளதாகவும், இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் பகீர் தகவல் ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ளது. 

சமீபமாகவே மருத்துவமனைக்கு வரும் தம்பதிகள் கொரோனாவால் ஆண்மை பறிபோதனாக எண்ணி சோதனை செய்துகொள்கின்றனர். மேலும், கொரோனாவின் தொடக்கத்தில் கணவன் - மனைவி பிரிந்து இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டன. 

India

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்ததும் தாம்பத்திய செயல்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தம்பதிகளிடையே சண்டையும் நடந்துள்ளது. சிலருக்கு ஆண்மைத்தன்மையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பான சிகிச்சைகள் இந்திய அளவில் அதிகளவில் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.