புஷ்பா படத்தை மிஞ்சிய செம்மரக்கட்டை கடத்தல்.! சோதனையில் போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.!
புஷ்பா படத்தை மிஞ்சிய செம்மரக்கட்டை கடத்தல்.! சோதனையில் போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டாகி வரும் திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரத்தை கடத்துவது தான் கதை. போலீசிடம் மாட்டாமல் இருப்பதற்க்க்காக அப்படத்தில் அல்லு அர்ஜுன் பால் வண்டி டேங்கரில் செம்மரத்தை கடத்தும் சீன் ஒன்று அமைந்திருக்கும்.
இந்தநிலையில் புஷ்பா பட பாணியில் பல கோடி மதிப்பிலான செம்மரக்கட்டையை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். யாசீன் என்ற நபர் லாரியில் செம்மரத்தை ஏற்றி, அதன் மேல் பழங்கள் மற்றும் காய்கறி பெட்டிகளை ஏற்றிச்சென்றுள்ளார்.
இவர் கர்நாடகா-ஆந்திரா எல்லையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு செல்லும்போது அந்த வாகனத்தை மகாராஷ்டிரா காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வண்டியில் செம்மரம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த மகாராஷ்டிரா காவல்துறையினர் யாசீனை கைது செய்து இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.