தொழில் போட்டியால் வன்மம்.. ரியல் எஸ்டேட் அதிபர் மீது மர்மக்கும்பல் வெறிச்செயல்..! துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்..!!

தொழில் போட்டியால் வன்மம்.. ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடுரோட்டில் வெறிச்செயல்..! துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்..!!


real-estate-owner-murder-issue

தொழில்போட்டியின் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் கொல்லப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் மாதாப்பூர் என்ற இடத்தில் இஸ்மாயில் என்பவர் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இந்த நிலையில் தொழில் போட்டியின் காரணமாக இவரை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளனர்.

அண்மையில் சிறையிலிருந்து வந்த சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வீட்டில் இருந்து இஸ்மாயில் வெளிவந்தபோது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இஸ்மாயில் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் ஒருவரை மருத்துவமனையில் அருகிliருந்தவர்கள் அனுமதித்தனர். 

telungana

பின் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தப்பியோடிய சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.