த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
பிரேத பரிசோதனைக்கு பின் உடலை வாங்கிய உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்!
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைகுந்த வாசு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் ஏலுரு அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பிரேத பரிசோதனைகள் முடிந்து அனைத்து விதிமுறைகளுக்கும் பின்னர் வைகுந்த வாசுவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் வாசுவின் உடலை கண்ட உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வைகுந்த வாசுவின் உடலில் கண்கள் மற்றும் கண்இமைகள் இல்லை. அவை அனைத்தையும் எலிகள் கடித்துத் தின்றுள்ளது. அதைத்தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் வைகுண்ட வாசுவின் உறவினர்களை சமாதானப்படுத்தி உடலை கொடுத்து அனுப்பினர்.
மேலும் இதனைப் போலவே ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், மருத்துவமனையில் உள்ள ஆறு ப்ரீசர்களில் ஒன்று மட்டும் தான் தற்போது வேலை செய்கிறது. அதனால்தான் இவ்வாறு அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. என கூறியுள்ளனர்,