இந்தியா ஆன்மிகம்

நேற்று நடந்த ராமர் கோவில் பூமி பூஜை! உலக அளவில் டிரெண்ட் செய்த ராம பக்தர்கள்!

Summary:

ramar temple hass tag

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவில், அடிக்கலை நாட்டிவைத்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவில் மட்டுமின்றி நேற்று அதிகாலை முதல் உலகம் முழுவதும் ஜெய்ஸ்ரீ ராம் என்ற கோஷம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகும் பல எதிர்ப்புகளுக்கும் இடையே நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ராம பக்தர்கள் அனைவரும் டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.

"ஜெய் ஸ்ரீராம்", "ராம ராஜ்யம் ஆரம்பம்", "ராமர் மீண்டும் தர்ம நகரத்திற்கு திரும்பினார்" போன்ற  ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு உலக அளவில் ராமர் கோவில் பூமி பூஜை விழாவை டுவிட்டரில் ராம பக்தர்கள் டிரெண்ட் செய்தனர்.


Advertisement