இந்தியா லைப் ஸ்டைல்

அடேய்! அது பாம்புடா!!! சீறி வந்த கருநாக பாம்பை வெளுத்து வாங்கிய குடிபோதை ஆசாமி! சுருண்டு விழுந்த பாம்பு!

Summary:

Rajasthan man fight with cobra

ராஜஸ்தான் மாநிலம் தவ்சா பகுதியில் குடிபோதையில் கருநாக பாம்பை வம்புக்கு இழுத்தவரை கருநாகம் சரமாரியாக கொத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் கொடிய விஷம்தான்.

ஆனால், நம்மாளுங்க குடித்துவிட்டால் போதும், எதிரே சிங்கம், புலி நின்றாள் கூட அவற்றை எதுத்து சண்டையிடும் திறமை வந்துவிட்டதாக தோன்றும். அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் குடித்துவிட்டு சாலையில் வந்துகொண்டிருந்தபோது அவருக்கு குறுக்கே கருநாக பாம்பு ஓன்று வந்துள்ளது.

பாம்பை பார்த்த அந்த ஆசாமி பாம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனுடன் சண்டை போட்டுள்ளார். மேலும், அந்த பாம்பு எங்கும் தப்பித்துச்செல்லாதவறு அதை துரத்தி துரத்தி வம்புக்கு இழுத்துள்ளார். இந்த கலாட்டாவில் பாம்பு அந்த போதை ஆசாமியை பலமுறை கொத்தியுள்ளது.

பாம்பு கொத்தியும் அவர் விடுவதாக இல்லை, மீண்டும் மீண்டும் அந்த பாம்புடன் அவர் சண்டைக்கு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரை கொத்தி கொத்தி அந்த பாம்பு சுருண்டு விழுந்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Advertisement