பாம்பு கடித்து 2 சிறுமிகள் பலி : துடித்த சிறுமிகளை சாமியாரிடம் அழைத்து சென்று மந்திரம் ஓதிய பெற்றோர் - மூடநம்பிக்கையின் உச்சகட்ட கொடுமை..!

பாம்பு கடித்து 2 சிறுமிகள் பலி : துடித்த சிறுமிகளை சாமியாரிடம் அழைத்து சென்று மந்திரம் ஓதிய பெற்றோர் - மூடநம்பிக்கையின் உச்சகட்ட கொடுமை..!


rajasthan-2-child-girl-died-snake-byte

தூங்கிக்கொண்டு இருந்த சிறுமிகளை பாம்பு கடித்த நிலையில், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பெற்றோரின் மூட நம்பிக்கையால் இருவரும் பலியான சோகம் நடந்துள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகேயுள்ள கிராமத்தில் 2 சிறுமிகள் வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த பாம்பு சிறுமிகளை கடித்துள்ளது. இதனால் அலறிய சிறுமிகள் அடுத்தடுத்து பாம்பின் விஷ வீரியத்தால் உயிரிழந்தனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர், குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து செல்லாமல் உள்ளூரில் இருக்கும் வாளா பாபா என்ற சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளனர். 

rajasthan

சாமியாரும் பெற்றோரை கண்டித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல், தலையில் அடித்து மந்திரம் ஓதியுள்ளான். இதனால் 3 மணிநேரம் உயிருக்கு போராடிய சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

3 மணிநேரத்திற்கு பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில், அங்கு சிறுமிகள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.