இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா? 1,03,769 காலியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்கள்!.

இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா? 1,03,769 காலியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்கள்!.



railway-recruitment


இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 1,03,769. இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை மண்டலத்துக்கு மட்டும் 9,579 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: 
அசிஸ்டெண்ட் (WorkShop)
அசிஸ்டெண்ட் (Loco Shed)
அசிஸ்டெண்ட் (Pointsman)
அசிஸ்டெண்ட் (Signal & Telecom)
அசிஸ்டெண்ட் (Track Machine)
டிராக் மெயிண்டனர் கிரேடு IV , இன்னும் பல.

ரயில்வே வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Central Railway – 9345
2. East Central Railway – 3563
3. East Coast Railway – 2555
4. Eastern Railway, CLW & Metro – 10873
5. North Central Railway and DLW – 4730
6. North Eastern Railway, MCF and RDSO – 4002
7. North Western Railway – 5249
8. Northeast Frontier Railway – 2894
9. Northern Railway, DMW and RCF – 13153
10. South Central Railway – 9328
11. South East Central Railway – 1664
12. South Eastern Railway – 4914
13. South Western Railway and RWF – 7167
14. Southern Railway and ICF – 9579
15. West Central Railway – 4019
16. Western Railway 10734

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 12.03.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2019 

தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்:

ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 23.04.2019
ஆப்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 18.04.2019, மதியம் 01.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பங்களை முழுமையாக சமர்பிக்க கடைசி தேதி: 26.04.2019
கணினி வழித்தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் - அக்டோபர் 2019 

வயது வரம்பு:

01.07.2019 தேதியின்படி பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினரும் அரசு விதிகளின் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம் :
பொதுப் பிரிவினர் - ரூ.500  
மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) - ரூ.250 

முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர்கள் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். 
ஆன்லைனில் இன்டர்நெட் பேங்கிங் அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். ஆஃப்லைனில் எஸ்.பி.ஐ சல்லான் மூலமாகவோ அல்லது தபால் நிலையத்தில் உள்ள சல்லான் மூலமாகவோ தேர்வுக்கட்டணத்தை செலுத்தும் வசதியும் உண்டு.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சியோ அல்லது ஐடிஐ சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு செய்யப்படும் முறை: 

கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் முழு விவரங்கள் அறிய,
http://www.rrbcdg.gov.in/uploads/CEN-No-RRC-01-2019.pdf அல்லது https://nr.rly-rect-appn.in/rrbgroupd2019/cen.pdf- அல்லது  http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.